‘நேர்கொண்ட பார்வை’ பற்றி பரவும் வதந்தி – முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்!

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தை வினோத் இயக்குகிறார்.

அஜித் வழக்கறிஞராக நடித்துள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் இணைந்துள்ளார். ஷூட்டிங் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. ஆகஸ்ட் 10ம் தேதி படம் ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பிங்க் படத்தில் அமிதாப் பாடியது போல நேர்கொண்ட பார்வையில் தல அஜித் ஒரு மோட்டிவேஷன் பாடல் பாடுகிறார் என தொடர்ந்து செய்தி பரவி வந்தது.

இது பற்றி யுவன் ஷங்கர் ராஜா ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். ‘அப்படி எந்த திட்டமும் இல்லை’ என அவர் பதில்அளித்துள்ளார்.

மேலும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் ரிலீஸ் ஆன பிறகு, சில மாதங்கள்கழித்து சீனாவிலும் படத்தை ரிலீஸ் செய்ய போனி கபூர் திட்டமிட்டுள்ளாராம்.

Suggestions For You

Loading...