கொடிகட்டி பறக்கும் யோகி பாபுவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

yogi babu

தமிழ் சினிமாவில் தற்போது காமெடியில் கொடிகட்டி பறக்கும் நடிகர் என்றால் யோகி பாபு தான். இவர் இல்லாத படங்கள் இல்லை என்றே கூறலாம், குறுகிய காலத்தில் யோகி பாபு 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்ற நம்ப முடிகிறதா? உண்மைதான்.

அவரது உடல் அமைப்பும், அவரது டைமிங் காமெடி ரசிகா்களை மிகவும் ஈா்த்துள்ளது. அவா் திரையில் வந்தாலே போதும் காமெடிக்கு கேரண்டி என்ற நிலை உருவாகிவிட்டது.

இவரது கால்ஷீட் கிடைப்பதே தற்போது கடினமாகியுள்ளது. கடந்த வருடம் மட்டும் 20 படங்களில் நடித்துள்ளார். இதில் சர்கார், கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள் ஆகிய படங்கள் அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்தன.

அதே போன்று இந்த வருடம் தற்போது வரை அவருக்கு 19 படங்கள் வரை உள்ளதாம். தற்போது அவர் தர்ம பிரபு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான நடிகராக வலம் வரும் யோகி பாபு தற்போது சம்பளத்தை ஒரு நாளுக்கு ரூ 5 லட்சம் என உயர்த்தியுள்ளார்.

Suggestions For You

Loading...