முன்னணி நடிகருடன் மோதும் யோகி பாபு – ஹீரோவான முதல் படத்திலேவா?

யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நாயகனாக வலம் வருகிறார்.அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக இவர் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வாரவாரம் படங்கள் வெளியாகும்.  இந்நிலையில் இவர் முதன் முதலாக ஹீரோவாக நடித்துள்ள படம் தர்மபிரபு.

இப்படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது அதை தொடர்ந்து மே 1ஆம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

அதே நாளில்தான் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படமும் வெளியாக உள்ளது. அப்படி மே 1 வந்தால் சிவகார்த்திகேயன் என்ற முன்னணி நடிகருடன் மோதும் நிலைமை யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் முதல் படத்திலேயே அமையும்.

Suggestions For You

Loading...