இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் ஹீரோ மாற்றம் – வடிவேலுக்கு பதில் இவரா?

இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் இயக்குனர் சிம்பு தேவன் இயக்க ஷங்கர் தயாரிக்கவுள்ளார்.

படப்பிடிப்பு ஆரம்பித்து சில நாட்களில் வடிவேலுக்கும் இயக்குனர் சிம்பு தேவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததால் படிப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனால் பல கோடி வரை நஷ்டமானதால் வடிவேலுக்கு சிக்கல்கள் வந்தது. வடிவேலுவிடம் தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சமாதானம் பேசப்பட்டது.

ஆனாலும் இதுவரை படப்பிடிப்புக்கு அவர் செல்லவில்லை. இதனால் படக்குழுவினர் வடிவேலுக்கு பதிலாக யோகிபாபுவை இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

Suggestions For You

Loading...