பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஸ்விக்கி ஊழியர் – 200 கூப்பன் கொடுத்து மறைக்க பார்த்த நிறுவனம்!

பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் ஸ்விக்கி ஆப்பில் உணவு ஆர்டர் செய்ததையடுத்து உணவு பார்சலை டெலிவரி செய்ய வந்த அந்நிறுவன நபர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் வாடிக்கையாளர்கள் சேவை மையத்தை தொடர்பு கொண்டு புகாரளித்தார். ஆனால் ஸ்விக்கி நிறுவனம், அந்த பெண்ணிடம் மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தையை கூறி இந்த விவகாரத்தை முடித்ததுடன் அந்த பெண்ணுக்கு 200 ரூபாய் மதிப்புள்ள கூப்பனை இழப்பீடாக அளித்து இவ்விகாரத்தை அத்துடன் முடிக்க பார்த்துள்ளது.

ஸ்விக்கியின் இந்த செயலால் அதிர்ந்த அந்த பெண் இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு நியாயம் கேட்டார். அப்பெண்ணின் பதிவு நாடு முழுவதும் வைரலாக பரவியது. சம்பவத்தை கேள்விப்பட்டவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் தற்போது இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Loading...