இந்தியன் 2 படத்தில் இல்லாதது ஏன்? ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்!

உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரது இசையில் சர்வம் தாளமயம் படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கிடையே ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பேட்டியில் “இந்தியன் 2” படத்தில் இசையமைக்காதது பற்றி பதிலளித்துள்ளார்.

‘தற்போது இல்லை ஷங்கர் அந்நியன், நண்பன் படத்தில் கூட பிரிந்து வேலை பார்த்துள்ளார், இது ஒரு சிறிய கேப் தான், மீண்டும் இணைவோம்.

கமல் சார் நான் தான் இசையமைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார், ஆனால், ஒரு சில காரணங்களால் முடியவில்லை’ என்று கூறியுள்ளார்.

Loading...