விஸ்வாசம் படத்தால் இங்கே எவ்வளவு நஷ்டம் தெரியுமா? – வருத்தமான தகவல்!

கடைசியாக வெளியான அஜித்தின் விவேகம் படத்தின் தோல்வியை சரிசெய்ய மீண்டும் அதே கூட்டணியில் உருவான படம் தான் “விஸ்வாசம்”.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த மாதம் வெளியான விஸ்வாசம் படம் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது. தயாரிப்பாளர் முதல் விநியோகஸ்தர்கள் வரை அனைவருக்கும் தமிழ்நாட்டில் படம் லாபத்தை கொடுத்துள்ளது.

அதேநேரத்தில் படம் சில இடங்களில் நஷ்டம் என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது.இதை இப்பட தயாரிப்பாளரே ஒரு பேட்டியில் இந்த படம் எங்களுக்கு லாபத்தை கொடுத்துவிட்டது என்று தான் கூறினார்.

ஆனால் இப்படம் வெளிநாட்டில் ரூ. 75 லட்சம் நஷ்டம் என கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியாவின் விஸ்வாசம் வரவேற்பு பெறவில்லை.

Suggestions For You

Loading...