தமிகத்தில் சர்கார் வாழ்நாள் வசூல் சாதனையை முறியடித்த விஸ்வாசம்!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 10ஆம் தேதி பொங்கல் விருந்த வெளியான படம் “விஸ்வாசம்”. இப்படத்துடன் ரஜினியின் பேட்ட படமும் வெளியானதால் கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில் பேட்ட படத்துடன் வந்தும் விஸ்வாசம் தமிழகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வருகின்றது. குறிப்பாக தென் தமிழகத்தில் இப்படம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

சுமார் ரூ 120 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் மட்டும் விஸ்வாசம் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. மேலும், இதன் மூலம் சர்கார் தமிழக வசூலை விஸ்வாசம் பின்னுக்கு தள்ளியுள்ளது,

ஆனால் விஜய்யின் மெர்சல் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...