விஸ்வாசம் (தெலுங்கு) போஸ்ட்டரை பார்த்து மெர்சலான தெலுங்கு ரசிகர்கள்!

தல அஜித், நயன்தாரா ஆகியோர் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையின் போது வெளியான படம் ‘விஸ்வாசம்’.

இப்படம் வெளியாகி ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்ததால், இன்றும் படம் பல தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. கிட்டதட்ட நூறு தியேட்டர்களுக்கு கூடுதலான தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

தற்போது இப்படம் தெலுங்கு, கன்னட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. இதில் விஸ்வாசம் படத்தின் தெலுங்கு ஃபஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அஜித்தின் தெலுங்கு ரசிகர்கள் சமூக தளங்களில் போஸ்ட்டரை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். தமிழில் வெளியான அதே இரண்டு கெட் அப்களில் இருக்கும் அஜித்தின் போஸ்டர் தான் தெலுங்கிலும் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் டாப் செய்யப்பட்ட விஸ்வாசம் படம் வரும் மார்ச் 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading...