அடேங்கப்பா.. விஸ்வாசம் படம் ஷேர் மட்டும் இத்தனை கோடியா?

அஜித்தின் விஸ்வாசம் படம் பொங்கல் விருந்தாக கடந்த 10ஆம் தேதி வெளியாகி செம வரவேற்பை பெற்றுவருகிறது. அஜித்தின் சினிமா வாழ்க்கையில் இப்படம் ஒரு மறக்க முடியாத படமா இருக்கும்.

இதுவரை இளைஞர்களை மட்டும் கவர்ந்து வந்த தல அஜித், இந்த படம் மூலம் குடும்பம் முழுவதையும் கவர்ந்துவிட்டார். தமிழகத்தில் இப்படம் வெளியான அணைத்து இடங்களிலும் ஹிட் என்று உறுதியாகியுள்ளது.

திரையிட்ட அனைத்து திரையரங்குகளும் இது தான் எங்கள் திரையரங்கில் அதிக வசூல் என்று கூறி வருகின்றனர். அப்படியிருக்க விஸ்வாசம் தமிழகம் முழுவதும் ஷேர் மட்டுமே ரூ 68 கோடி கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதன் மூலம் சுமார் ரூ 16 கோடிகளுக்கு மேல் விநியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைத்திருக்கும் என தெரிகின்றது.

அஜித்தின் வேதாளம் ரூ 12 கோடி வரை விநியோகஸ்தர்களுக்கு லாபம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...