அஜித்தின் படங்களிலே அதிக ஷேர் வந்தது விஸ்வாசம் தானாம் – இத்தனை கோடியா?

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் “விஸ்வாசம்”. தல ரசிகர்கள் மட்டுமின்றி குடும்பம் குடும்பமாக பார்வையாளர்கள் வருவதாக தியேட்டர் உரிமையாளர்களே கூறிவருகிறார்கள்.

இப்படியொரு வெற்றிக்கு பிறகு விஸ்வாசம் வெளியான முதல் வாரத்திலேயே போட்ட தொகை கிடைத்துவிட்டதாக பல விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் கூறியதை பார்த்தோம்.

அதேபோல் தற்போது வரை தமிழகத்தில் விஸ்வாசம் ஷேர் ரூ 56 கோடி வரை கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. அஜித்தின் படங்களிலே அதிக ஷேர் இது தானாம்.

எப்படியும் ரூ 65 கோடி வரை ஷேர் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இப்படத்துடன் வெளியான ரஜினியின் பேட்ட படம் கூட நல்ல வசூலை ஈட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

Loading...