பாகுபலி 2 படத்திற்கு பிறகு விஸ்வாசம் படைத்த பலே சாதனை!

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த படம் விஸ்வாசம். இப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது. ரிலீஸான முதல் நாளிலேயே தமிழகத்தில் ரஜினியின் பேட்ட படத்தை வசூலில் முந்தியது.இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது.

விஸ்வாசம் வெளியான முதல் வாரத்திலேயே படத்தின் செலவு மொத்தத் தொகையும் வசூலாகிவிட்டதாக படத்தின் தயாரிப்பாளரும், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

தற்போது இப்படம் வெளிவந்து 20 நாட்கள் கடந்தும் நேற்று வரை தமிழகத்தின் வசூல் கோடியில் தான் இருந்ததாம்.

இன்னும் வசூல் லட்சங்களுக்கு கூட குறையவில்லையாம், பாகுபலி-2விற்கு பிறகு இப்படி ஒரு சாதனையை விஸ்வாசம் தான் செய்துள்ளதாம்.

Loading...