தற்போது வரை விஸ்வாசம் படத்தின் வசூல் விவரம் – புதிய வரலாறு !

சிவா- அஜித் கூட்டணியில் நான்காவது முறையாக இணைந்து உருவான படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் தம்பி ராமையா, யோகி பாபு, ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

குடும்ப கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமா ஓடிக்கொண்டிருக்கிறது. வசூலில் இதுவரை அஜித் படங்கள் செய்யாத சாதனையை இப்படம் படைத்தது வருகிறது.

தற்போது 7 வது வாரத்தில் அடியெடுத்து வைக்கும் இப்படம் தமிழகத்தில் மட்டும் 110 திரையரங்குகளை ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் இப்பட தயாரிப்பாளர் தியாகராஜன் அவர்கள் தமிழ்நாட்டில் படம் எவ்வளவு வசூலித்துள்ளது, விநியோகஸ்தர்களுக்கு எவ்வளவு லாபம் என்ற முழு விவரத்தை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 130 கோடி வரை வசூலித்துள்ளதாம். படத்தை விநியோகம் செய்தவர்களுக்கு ரூ. 75 கோடி லாபம் கிடைத்துள்ளது.

விஸ்வாசம் மொத்தமாக 600 திரையரங்குகளில் வெளியானது என்றும் கிங் ஆப் ஓபனிங் அஜித் என சந்தோஷமாக கூறியுள்ளார்.

Loading...