அஜித் பிறந்தநாளன்று விஸ்வாசம் படத்தை ஒளிபரப்பும் பிரபல தொலைக்காட்சி!

viswasam

அஜித் – சிவா கூட்டணியில் நான்காவதாக வெளியான படம் ‘விஸ்வாசம்’. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கடந்த ஜனவரி 10-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்தது.

அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க, ஜெகபதி பாபு, விவேக், யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா, கலைராணி, மதுமிதா என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்தனர். டி.இமான் இசையமைத்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில், அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற மே 1-ம் தேதி ‘விஸ்வாசம்’ படத்தை ஒளிபரப்புகிறது சன் டிவி. படம் வெளியான 3 மாதங்களில் ஒரு படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.

இதேபோல், விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படத்தையும், ரிலீஸான ஓரிரு மாதங்களிலேயே உடனடியாக ஒளிபரப்பியது சன் டிவி. ‘தியேட்டரில் படம் ஓடிக் கொண்டிருக்கும்போதே ஒரு படத்தைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது தவறு’ என அந்த சமயத்தில் த்ரிஷா தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...