கர்நாடகா பாஸ் ஆபிஸை அடிச்சி தூக்கிய விஸ்வாசம் – இத்தனை கோடி லாபமா?

இயக்குநர் சிவா , அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.

இந்த படம் இப்படம் பொங்கலுக்கு விடுமுறையை குறிவைத்து ஜனவரி 10ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகின்றது.

தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்தது ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்ட செய்தியாக இருக்கிறது. திரையரங்குகளில் 3 வாரத்திலும் கூட்டங்கள் வருவதால் நல்ல வசூலை எதிர்ப்பார்க்கலாம் என்கின்றனர்.

இந்த நிலையில் இப்படம் தமிழ்நாட்டை தாண்டி கர்நாடகாவில் ரூ. 9.20 கோடி இப்போது வரை வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

கர்நாடகாவில் 4 கோடிக்கு விற்கப்பட்ட இப்படம் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தை தந்துள்ளது. மேலும் இது தமிழ் மொழியில் ரிலீஸான படம் என்று குறிப்பிடத்தக்கது.

இப்படம் கன்னடத்தில் டப் செய்து பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Loading...