விஸ்வாசம் படம் இந்த முக்கிய இடங்களில் நஷ்டமாகும் அபாயம் – அதிர்ச்சி தகவல்!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 10ஆம் தேதி வெளியான “விஸ்வாசம்” படம் செம ஹிட் அடித்துள்ளது. அஜித் ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பொதுவான சினிமா ரசிகரகளையும் இப்படம் கவர்ந்துள்ளது.

ரஜினியின் பேட்ட படத்துடன் வெளியானாலும் தமிழகத்தில் விஸ்வாசம் தான் இன்றும் முன்னிலை வகிக்கிறது. மேலும் விஸ்வாசம் உலகின் அனைத்து பகுதிகளிலும் ஹிட் அடிக்க, 3 இடங்களில் மட்டும் தோல்வியை சந்திக்க வைத்துள்ளதாக தெரிகிறது.

கேரளா, அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் விஸ்வாசம் படம் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாம். ஏற்கனவே கேரளாவில் விவேகம் படம் கடும் நஷ்டத்தை சந்தித்து குறிப்பிடத்தக்கது

அமெரிக்காவில் பேட்டயின் கை ஓங்கியுள்ளதகால் அங்கே விஸ்வாசம் கொஞ்சம் சரிவை கண்டுள்ளது. இந்த மூன்று இடங்களிலும் விஸ்வாசம் படம் நஷ்டமாகும் அபாயம் உருவாகியுள்ளது

Loading...