விஸ்வாசம் படம் இந்த இடத்தில் பெரிய நஷ்டம் – என்ன காரணம்?

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த “விஸ்வாசம்” படம் பொங்கல் விருந்தாக வெளியாகி செம ஹிட் அடித்துள்ளது.
கமெர்ஷியல் களத்தில் அப்பா மகள் செண்டிமெண்ட் படமாக அமைந்த விஸ்வாசம் பி & சி ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்துள்ளது.

உலகம் முழுவதும் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

ஆனால், அமெரிக்காவில் மிகவும் குறைந்த விலைக்கு விற்றும் இப்படம் அங்கு 30% நஷ்டம் அடைந்துள்ளதாம். இதற்கு தொடர்ந்து அஜித் ஒரே மாதிரியான படங்கள் செய்வது தமிழகத்தில் ஏற்றுக்கொண்டாலும் வெளிநாடுகளில் பெரியளவில் வரவேற்பு இல்லை.

குறிப்பாக சொல்லப்போனால் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அஜித் படங்களின் வசூல் குறைந்து வருகின்றது.

Suggestions For You

Loading...