விஸ்வாசம் படத்தின் மொத்த வசூல் – புதிய சாதனையை அஜித்!

சத்ய ஜோதி நிறுவனம் தயாரிப்பில் தல அஜித் – சிவா கூட்டணியில் உருவான படம் விஸ்வாசம். இப்படத்திற்கு முன்பு இதே கூட்டணியில் உருவான விவேகம் படம் தோல்வியை சந்தித்தது. அந்த நஷ்டத்தை சரிசெய்யவே மீண்டும் அதே கூட்டணியில் உருவான படம் தான் விஸ்வாசம்.

வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இப்படம் வெளியானது. பொங்கல் ஸ்பெஷலாக வெளியான இப்படத்திற்கு போட்டியாக ரஜினியின் பேட்ட படமும் வெளியானது.

ஆனால் ரசிகர்கள் மத்தியில் விஸ்வாசம் படம் மிக பெரிய வரவேற்பை பெற்றது. பொங்கலுக்கு குடும்பத்துடன் திரையரங்கிற்கு பார்க்கும் அளவிற்கு இப்படம் அமைந்திருந்தது. முக்கியமாக படத்தில் சொல்லவரும் கருத்து மக்களால் வரவேற்கப்பட்டது.

தமிழ்நாட்டில் இன்னும் படம் பல திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக தான் ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது படம் ரூ. 200 கோடி வசூலை எட்டியுள்ளது.

  • தமிழ்நாடு- ரூ. 139 கோடி
  • ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, மற்ற இடங்கள்- ரூ. 18 கோடி
  • வெளிநாடு- ரூ. 43 கோடி

மொத்தமாக படம் ரூ. 200 கோடிக்கு வசூலித்துள்ளது.இதனால் ரசிகர்கள் வழக்கம் போல் #Viswasam200CrsMegaBB போன்று டாக்குகளை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

Suggestions For You

Loading...