கர்நாடகாவில் கெத்து காட்டும் தமிழ் படம் – விஸ்வாசம் மாபெரும் சாதனை!

அஜித் கோலிவுட் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நட்சத்திரம். இவர் நடிப்பில் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையின் போது வெளியான படம் ‘விஸ்வாசம். இப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது.

சூப்பர்ஸ்டாரில் பேட்ட படம் வந்தபோதும் விஸ்வாசம் தமிழகம் முழுவதும் வசூல் சாதனை படைத்துள்ளது. தற்போதுவரை இப்படம் ரூ. 200 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்து வருகிறது.

இந்த வாரம் நிறைய புதிய படங்கள் வந்தாலும் நிறைய இடங்களில் அதிக திரையரங்குகளில் விஸ்வாசம் தான் ஓடுகிறது. இதுவே இப்படத்தின் வெற்றியை உறுதிசெய்துள்ளது.

இப்படி தமிழ்நாட்டை தாண்டி கர்நாடகாவிலும் விஸ்வாசம் வசூல் வேட்டை தானாம். 29 நாட்களில் படம் ரூ. 10.10 கோடி வசூலித்துள்ளதாம்.

Suggestions For You

Loading...