கடந்த 50 ஆண்டுகளில் சூப்பர்ஸ்டார் கூட செய்ய முடியாத சாதனையை செய்த அஜித்!

கடந்த மாதம் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள விஸ்வாசம் படம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு “ஜகமல்லா” என்ற பெயரில் இம்மாதம் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கர்நாடகாவில் தமிழ், தெலுங்கு மொழி படங்கள் வெளியாகும், ஆனால் கன்னட மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகாது,ஏன் பாகுபலி, 2.0 படங்கள் கூட கன்னடத்தில் டப் செய்து வெளியிட முடியவில்லை.

இதை முறியடிக்கும் வகையில் அஜித்தின் விவேகம் படம் “கமாண்டோ” என்ற பெயரில் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியானது. இப்படம் கடந்த 50 ஆண்டுகளில் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியான முதல் வேற்று மொழி படமாக அமைந்தது.

வட்டாள் நாகராஜ் போன்றவர்களின் எதிர்ப்புகளை மீறி வெளியான அஜித்தின் விவேகம் படம் அங்கே செம ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து அஜித்தின் ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களை டப் செய்து ரிலீஸ் செய்யப்பட்டு அணைத்து படங்களும் செம ஹிட் அடித்தது.

வரிசையாக மூன்று அஜித் படங்கள் டப் செய்யப்பட்டு வெளியானதை தொடர்ந்து நான்காவது படமும் வெளியாகவுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் வேறு எந்த நடிகரும் செய்யமுடியாத சாதனையை அஜித் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...