ரஜினியின் NO 1 இடத்தை தட்டி தூக்கிய அஜித் – விஸ்வாசம் பிரம்மாண்ட வசூல் சாதனை!

இந்த ஆண்டில் இரண்டு பிரம்மாண்ட வெற்றி படங்கள் என பேட்ட, விஸ்வாசம் என கூறலாம். வெளியாகி 50 நாட்களை நெருக்கவுள்ள நிலையில் இன்று இப்படங்கள் பல இடங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

குறிப்பாக விஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் 100க்கு மேலான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் அஜித்தின் விஸ்வாசம் படம் மாபெறும் சாதனை ஒன்றை செய்துள்ளது.

அதாவது தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் தமிழ்நாட்டில் அதிகம் வசூலித்த படங்களில் அஜித்தின் விஸ்வாசம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

பாகுபலி 2 படம் முதலிடத்தில் இருக்க மூன்றவது இடத்தில் 2.0 படம் இருக்கிறது. ஆனால் பாகுபலி 2 தமிழ், தெலுங்கு மொழிகளை சேர்த்து இந்த வசூலை பெற்றது.

ஆனால் அஜித்தின் விஸ்வாசம் தமிழில் மட்டுமே அதிக வசூல் செய்துள்ளது. அப்படி பார்த்தால் முதல் இடம் அஜித்திற்கு தான். அதற்கு அடுத்த இடத்தில் தான் ரஜினியின் 2.0 படம் உள்ளது.

Loading...