வரலாறு சாதனை படைத்த தல அஜித்தின் விஸ்வாசம் – ரஜினி, விஜய் கூட செய்ய முடியாதது!

கடந்த மாதம் வெளியான விஸ்வாசம் படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்துடன் வெளியானதை போதும் விஸ்வாசம் இன்று வரை அதிக திரையரங்குகளில் வெற்றிநடைபோடுகிறது.

குடும்பங்கள் கொண்டாடும் வகையில் விஸ்வாசம் அமைந்ததால் வசூல் கொட்டியது, இந்நிலையில் விஸ்வாசம் தமிழகத்தில் ரூ 20 கோடி வரை விநியோகஸ்தர்கள் லாபத்தை கொடுக்கவுள்ளதாம்.

இதற்கு முன் ரஜினி, கமல், விஜய், சூர்யா என எந்த ஒரு நடிகர்களின் படமும் இந்த லாபத்தை கொடுத்தது இல்லையாம். அஜித் படம் தான் தற்போது தமிழகத்தில் அதிக லாபம் பெற்ற படங்களில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

5வது வாரத்தில் விஸ்வாசம் படம் 200க்கு மேலான திரையரங்குகளில் ஓடிவருவது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...