5வது வாரத்திலும் மரண மாஸ் காட்டும் அஜித் – விஸ்வாசத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா?

அஜித்தின் விஸ்வாசம் படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிடித்துப்போனது. அதுமட்டுமில்லாமல் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்ததால் தியேட்டர்கள் நிரம்பி வழிகிறது.

ரஜினியின் பேட்ட படத்துடன் வெளியான போதும் விஸ்வாசம் பிரம்மாண்ட வசூல் சாதனையை படைத்துவருகிறது. படத்தை 4 வாரம் தாண்டியும் மக்கள் எப்படிபட்ட வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் இருக்கிறது.

5வது வாரத்தில் விஸ்வாசம் படம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 208 திரையரங்குகளில் ஒளிபரப்பாக இருக்கிறதாம். தற்போதெல்லாம் எந்த படமாக இருந்தாலும் 2,3 வாரமே தாக்கு பிடிக்கும்.

இந்நிலையில் விஸ்வாசம் 5வது வாரத்திலும் அதிகமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுகிறது குறிப்பிடத்தக்கது.

Loading...