பாகுபலி-2விற்கு பிறகு விஸ்வாசம் தான் அதிக வசூல் – அதுவும் எந்த ஏரியாவில் தெரியுமா?

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இப்படத்தின் மீது பலருக்கும் எதிர்ப்பார்ப்பு இருந்தது போல், சிலருக்கு வெறுப்பும் இருந்தது.

இதற்கு முக்கிய காரணம் சிவா கொடுத்த விவேகம் தோல்வி தான், இதனால், அஜித் ரசிகர்களே சிலர் இந்த படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லாமல் இருந்தனர்.

ஆனால், விஸ்வாசம் யாரும் எதிர்ப்பார்க்காதது போல் வசூலில் சாதனைக்கு மேல் சாதனை படைத்து வருகின்றது.

விஸ்வாசம் தமிழகத்தில் மட்டுமே ரூ 130 கோடிகளை தாண்டிய வசூலை பெற்றுள்ளது, இதில் கோயமுத்தூர் ஏரியாவில் மட்டுமே இப்படம் ரூ 20 கோடி வசூலை கடந்துள்ளதாம்.

இதில் சிறப்பு என்னவென்றால் இதற்கு முன் இப்படியான ஒரு வசூலை கொடுத்த படம் பாகுபலி-2 தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...