பாகுபாலி 2வின் சாதனையை முறியடித்த விஸ்வாசம் – இத்தனை திரையரங்குகளிலா?

விஸ்வாசம், பேட்ட படங்கள் இந்த வருடத்தின் பிரம்மாண்ட ஹிட் படங்களாக அமைந்தது. ரஜினிகாந்த், அஜித் ரசிகர்களை குஷி படுத்திய இப்படங்கள் வசூல் மழையும் பொழிந்தது.

விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர் என அனைவருமே இந்த படம் எங்களுக்கு லாபம் கொடுத்துள்ளது என்று பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்.

இன்று இப்படங்கள் 50வது நாளில் அடியெடுத்து வைக்கிறது. பேட்ட படத்தை விட அதிக திரையரங்குகளில் விஸ்வாசம் படம் ஓடிவருகிறது.

இந்நிலையில் விஸ்வாசம் படம் தமிழகத்தில் பாகுபலி 2படைத்த பிரம்மாண்ட சாதனையை முறியடித்துள்ளது.

அதாவது 50 நாளில் பாகுபலி 2 படம் 92 திரையரங்குகளில் ஓடியது, விஸ்வாசம் படம் தனது 50வது நாளில் 125 திரையரங்குகளில் ஓடி சாதனைப்படைத்துள்ளது.

Suggestions For You

Loading...