உண்மையில் பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் 10 கோடி வசூல் அதிகம் – யார் சொன்னது தெரியுமா?

ரஜினிகாந்தின் பேட்ட படமும் அஜித்தின் விஸ்வாசம் படமும் கடந்த 10ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இது ஒருபக்கம் இருக்க இரு படங்களிடையே வசூல் சண்டை தினமும் நடந்து வருகிறது. இதற்கிடையே பிரபல விநோயோகத்தர் ஒருவர் பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் 10 கோடி வசூல் அதிகம் என்று கூறியுள்ளார்.

“மிக மிக அவசரம்” என்ற படத்தின் ட்ரெயிலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இயக்குநர் பாரதிராஜா, பாக்யராஜ், சேரன், சீமான் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்ட பேசினார்கள்.

அண்ட் விழாவில் பேசிய பிரபல திருச்சி விநியோகஸ்தர் ஸ்ரீதர், “மிக மிக அவசரம்” படம் குறித்து பேசும் முன்பு ‘பேட்ட’ , ‘விஸ்வாசம்’ படங்களின் வசூல் பிரச்சினைகளுக்கு தான் முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாகக் கூறி பேச ஆரம்பித்தார்.

‘அந்த இரு படங்களும் ரிலீஸான தேதியிலிருந்தே அவற்றின் வசூல்கள் குறித்து தொடர்ந்து தவறான தகவல்களே அதிகம் பரவி வந்தன. இரு படங்களுமே 100, 150 கோடிகளைத் தாண்டியதாக வந்த செய்திகள் அத்தனையும் பயங்கர கப்ஸா. உண்மையில் பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் தமிழகத்தில் ரூ.10 கோடி அதிகம் வசூலித்தது. இது மட்டுமே உண்மை’ என்றார்.

Loading...