விஸ்வாசம் 50வது நாள் கொண்டாட்டத்திற்கு யாரெல்லாம் வருகிறார்கள் தெரியுமா?

சிவா- அஜித் கூட்டணியில் நான்காவது முறையாக இணைந்து உருவான படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் தம்பி ராமையா, யோகி பாபு, ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

குடும்ப கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமா ஓடிக்கொண்டிருக்கிறது. வசூலில் இதுவரை அஜித் படங்கள் செய்யாத சாதனையை இப்படம் படைத்தது வருகிறது.

வசூலில் கலக்கிவரும் இப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் 50வது நாள் கொண்டாடப்படவுள்ளது. அதற்கான கொண்டாட்ட வேலைகள் பல திரையரங்குகளில் நடந்து வருகிறது.

சென்னையின் பிரபல திரையரங்கான ரோஹினி திரையரங்கில் இயக்குனர் மற்றும் மற்ற கலைஞர்கள் 50வது நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வருகிறார்களாம்.

இதனை திரையரங்க உரிமையாளரே பதிவு செய்துள்ளார்.

Suggestions For You

Loading...