எனக்கும் காலம் வரும்.. அயோக்கியா படம் தள்ளிப்போனதால் விஷால் ஆவேசம் !

vishal

நடிகர் விஷால் நடித்துள்ள அயோக்கியா படம் இன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டு டிக்கெட் விற்பனை நடந்தது. ஆனால், தியேட்டர் போன ரசிகர்கள் அனைவருக்கும் கடும் அதிர்ச்சி தான், ஏனெனில் படம் ஒரு சில பிரச்சனையால் இன்று ரிலிஸாகவில்லை.

ayogya
ayogya

காரணம் சுமார் 4 கோடி ருபாய் பைனான்ஸ் பிரச்சனையால் தான் அயோக்யா ரிலீசுக்கு சிக்கல் வந்துள்ளது. கடைசி நிமிடத்தில் படம் நிறுத்தப்பட்டதால் காலை 8 மணி காட்சிக்கு தியேட்டர் சென்ற ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

பைனான்ஸ் பிரச்சனை விரைவில் தீர்க்கப்பட்டு மதியம் படம் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விஷால் ட்விட்டரில் கோபத்துடன் பதிவு செய்துள்ளார். “எனக்கும் காலம் வரும்” என அவர் ட்விட் செய்துள்ளார்.

Loading...