வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் விஷால்!

Vishal

லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் துருக்கியில் உள்ள கப்படோசியாவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஷால் – மிஷ்கின் கூட்டணியில் துப்பறிவாளன் 2 படம் எடுக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் 2017ல் வெளியான ’துப்பறிவாளன்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி வெற்றியை பெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு விஷாலுக்கு அது வெற்றிப்படமாக அமைந்தது.

Loading...