ராணுவ வீரரிடம் தொலைபேசியில் பேசிய விஜய் – வெளியான ஆடியோ இதோ!

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டிச் சென்ற இந்திய விமானப்படை விமானம்,
பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தது.

விமானத்தில் இருந்த ‘விங் கமாண்டர்’ அபிநந்தனை, பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்தனர். அபிநந்தனை விடுவிக்க உலக நாடுகளும் பாகிஸ் தானுக்கு நெருக்கடி கொடுத்தன.

இதையடுத்து, அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில், அபிநந்தனை விடுதலை செய்வதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். நேற்று வீடு திரும்பினார் அபிநந்தன், பாகிஸ்தானின் இந்த செயல் நாடு முழுவதும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் தமிழ்செல்வனுடன் நடிகர் விஜய் போன் மூலம் நலம் விசாரித்தது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

எந்தவொரு விளம்பரமுமின்றி நிகழ்ந்த ராணுவ வீரருக்கிடையேயான விஜய்யின் இந்த உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது.

Suggestions For You

Loading...