விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் – புரட்சி கூட்டணி!

vijay sethupathi

எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. லாபம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் வேலை பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது.

இதில் விவசாயி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் முதல் முறையக இணைத்துள்ளார். இப்படத்தில் ஸ்ருதி பாடகி மற்றும் டான்ஸராக நடிக்கிறாராம்.

7cs என்டேர்டைன்மெண்ட் மாற்று விஜய் சேதுபதி இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைக்க ஜெகபதி பாபு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். விஜய் சேதுபதியை இப்படியொரு கதாபாத்திரத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

மேலும் எஸ்.பி. ஜனநாதன் படம் என்றால் அதில் சமூக கருத்து மிகவும் அழுத்தமாக இருக்கும். விஜய் சேதுபதியும் மிக வாழ்க்கையில் நிறைய சமூக கருத்துக்களை கூறுவருவார். இப்படியொரு கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Loading...