விஜய் சேதுபதி மகன் படப்பிடிப்பில் செய்த வேலை – ஆச்சர்யத்தில் படக்குழு!

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகராகிவிட்டார். இவர்கையில் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது.

சினிமாவை தாண்டி இவரது நல்ல குணங்கள் மூலம் நிறைய பேரை கவர்ந்துள்ளார். இவர் தற்போது சிந்துபாத் படத்தின் நடித்துள்ளார், சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் நடித்துள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் படம் முழுவதும் வருபவர் லிங்கா. இவர் ஒரு பேட்டியில் விஜய் சேதுபதி மகன் பற்றி பேசியுள்ளார். அதில், அப்பாவை போலவே அவரது மகன் உள்ளார் என்று தான் கூற வேண்டும். எல்லோருக்கும் சரியான மரியாதை கொடுப்பார், ஒவ்வொரு விஷயத்திலும் சூர்யா அதிகம் யோசிப்பார்.

படப்பிடிப்புக்கு முடிவில் படப்பிடிப்பில் இருப்பவர்களுக்கு ஏதாவது கொடுப்பது வழக்கம், இந்த முறை அவரது மகன் கொடுத்தார். அப்போது ஒருவர் நம்ம யூனிட்டிற்கு மட்டும் கொடு என்று கூற உடனே சூர்யா ஏன் இங்கே மட்டும் எல்லோருக்கும் கொடுக்கலாம் என்று அனைவரையும் கூப்பிட்டு கொடுத்தார்.

சூர்யாவின் அந்த செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது என்று பேசியுள்ளார்.

Suggestions For You

Loading...