அதிரடியில் இறங்கிய விஜய் சேதுபதி – சிந்துபாத் மாஸ் ட்ரைலர் ட்ரெண்டிங்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது ‘சிந்துபாத்’ படத்தில் நடித்துள்ளார். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கி இருக்கும் இப்படம் விஜய் சேதுபதியின் 26-வது படமாகும்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்துள்ளார்.

ஆக்ஷன் த்ரில்லர் படமான உருவாகியுள்ளது சிந்துபாத். வரும் 21ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று அஞ்சலியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. அதிரடியில் இறங்கியுள்ள விஜய் சேதுபதிக்கு இப்படம் கைகொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Suggestions For You

Loading...