விஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டுக்கள் – ஏன்?

மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி தற்போது கையில் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்துள்ளார். தனது தனித்துவமான நடிப்பில் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு மிக உயரிய கலைமாமணி பட்டம் வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு முன்பு இந்த விருதை கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல கலைஞர்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கலைமாமணி விருது கடந்த 6 ஆண்டுகள் கழித்து கொடுக்கப்படுகிறது. இதை பெரும் விஜய் சேதுபதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

விஜய் சேதுபதி மட்டுமின்றி சசிகுமார், பிரபுதேவா, கார்த்தி, ஸ்ரீகாந்த், சந்தானம் , யுவன்சங்கர் ராஜா, பிரியாமணி, சிங்கமுத்து, பொன்வண்னன் உள்ளிட்ட பல கலைஞர்களுக்கும் இந்த விருது வழங்கப்படவுளள்து.

Suggestions For You

Loading...