விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது – தலைப்பு இதோ!

2021 வரை விஜய் சேதுபதியின் கால் ஷீட் நிரம்புயுள்ளது. தற்போது இவர் நடிப்பில் சிந்துபாத், மாமனிதன், சூப்பர் டிலக்ஸ், சயி ரா நரசிம்ம ரெட்டி உள்ளிட்ட பல படங்கள் தயாராகி வருகின்றது. இது இல்லாமல் ஒரு மலையாள படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் நேற்று 96 படத்தின் 100வது நாள் கொண்டாட விழா நடந்ததது.இதில் தான் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டவர்.

“துக்ளக்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை டெல்லி பிரசாத் என்கிற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். 96 படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட 7 ஸ்கீரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இதுகுறித்து விஜய் சேதுபதி கூறியதாவது – டில்லி பிரசாத் எனது 8 ஆண்டு நண்பர், மிகவும் திறமைசாலி அவரை நம்பி கிணற்றில் கூட குதிக்கலாம். அந்த அளவிற்கு நம்பிக்கையானவர். துக்ளக் கதையை ஏற்கெனவே என்னிடம் சொன்னார். நான் நடிக்கிறேன் என்று கூறியிருந்தேன் எனக்காக காத்திருந்தார். இப்போது அதற்கான நேரம் வந்திருக்கிறது. என்றார்.

Loading...