விஜய் சேதுபதியின் புதிய படத்தில் இணைந்த இரண்டு இளம் ஹீரோயின்கள்!

விஜய் சேதுபதி படங்களுக்கு தற்போது தனி எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவர் கையில் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்துள்ளார் என்பது நமக்கு தெரியும்.

தற்போது சீனுராமசாமி இயக்கும் மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சன் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் அவர் வாலு, ஸ்கெட்ச் பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் மற்றும் ராஸி கண்ணா நடிக்கிறார்களாம். வட சென்னையை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது.

டி. இமான் இசையமைக்கவுள்ள இப்படத்தில் காமெடி நடிகர் சூரி இணைந்துள்ளார்.

Suggestions For You

Loading...