குறும்படம் முதல் வெப் சீரிஸ் வரை – கலக்கும் விஜய் சேதுபதி !

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ஃபகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’.

திரையுலக பிரபலங்கள் மட்டுமன்றி விமர்சகர்கள் பலரும் இப்படத்தைக் கொண்டாடினாலும், வசூல் ரீதியாக இப்படம் பெரும் வரவேற்பைப் பெறவில்லை.

விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து வித்யாசமான கதாபாத்திரங்களில் எடுத்து நடித்துவரும் இவர் அடுத்ததாக புதிய அவதாரம் எடுக்கவுள்ளார்.

ஆம் விஜய் சேதுபதி அடுத்த ஒரு வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார், இதில் ஹன்சிகாவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது என்ன மாதிரியான வெப் சீரிஸ் போன்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

விஜய் சேதுபதிகுறும்படத்தில் ஆரம்பித்து திரைப்படம், தொலைக்காட்சி தற்போது வெப் சீரிஸ் என அனைத்திலும் கலக்கிவருகிறார்.

Loading...