சினிமா பயணத்தில் விஜய் சேதுபதி முதல் முறையாக எடுக்கும் முயற்சி – ரசிகர்கள் குஷி!

vijay-sethupathi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இந்த ஆண்டில், இவரது நடிப்பில் ‘பேட்ட’, ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து இம்மாதம் சிந்துபாத் படம் வெளியாகவுள்ளது. இதில், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தளபதி 63 படத்தில் ’63’ ஜெர்ஸியில் தோன்றும் இந்துஜா – கெட் அப் கசிந்தது !

‘வாலு’, ‘ஸ்கெட்ச்’ ஆகிய படங்களை இயக்கியவர் விஜய் சந்தர் விஜய் சேதுபதியை வைத்து ‘சங்கத்தமிழன்’ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். முறுக்கு மீசையுடன் விஜய் சேதுபதி தோன்றும் ‘சங்கத்தமிழன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

Sanga Tamizhan
Sanga Tamizhan

இப்படத்தில் இவர் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளாராம், இதனால், விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் தான்.

மேலும், ‘சங்கத்தமிழன்’ பக்கா மாஸ் கதையாம், முழுக்க முழுக்க கமர்ஷியல் அதிரடியாக இருக்கும் என கூறப்படுகின்றது.

Suggestions For You

Loading...