கேரளா மக்களை நெகிழவைத்த விஜய் சேதுபதியின் செயல் – வைரலாகும் வீடியோ!

விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் முக்கியமாக நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டார். மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் இவர் தனது ரசிகர்களிடையே நெருக்கமாக பழகக்கூடியவர்.

96 படத்திற்கு பிறகு கேரளாவில் மிக பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை உருவாகிவிட்டார். எப்போது பொது இடத்திற்கு வந்தாலும் அவரை சுற்றி பெரிய அளவில் ரசிகர் கூட்டம் கூடிவிடும்.

அப்படி சமீபத்தில் கேரளாவில் அவர் ஷூட்டிங் சென்றிருந்த போது ரசிகர்கள் மத்தியில் சிக்கிய வீடியோ அதிகம் வைரலானது.

அவர் அடுத்ததாக சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்துவரும் மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடந்து வருகிறது.

மாமனிதன் படப்பிடிப்பு இடையில் ஊனமுற்றவர் ஒருவர் வெளியில் இருந்துள்ளார். அவர் கேட்காமலேயே விஜய் சேதுபதி பண உதவி செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Loading...