யோகன் படத்திலிருந்து வெளியேறிய விஜய் – வெளியான உண்மை காரணம்!

கடந்த 2012 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட படம் யோகன். ரசிகர்கள் மத்தியில் இந்த கூட்டணிக்கு மிக பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால் இந்த படம் ஷூட்டிங் துவங்காமலேயே ட்ராப் ஆனது. அப்போது இதற்கு என்ன காரணம் என்று வெளியாகவில்லை. தற்போது படம் நின்று போனது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் எப்போதும் படத்தின் முழு கதையையும் கேட்ட பிறகு அது பிடித்திருந்தால் தான் நடிக்க சம்மதிப்பாராம். கெளதம் மேனன் 75 சதவீத கதையை மட்டும் சொல்லிவிட்டு மீதி கதையை கூறாமல் இழுத்தடித்தாராம்.

அதனால் தான் யோகன் படமே வேண்டாம் என விஜய் ட்ராப் செய்துவிட்டார் என கூறப்படுகிறது.

Suggestions For You

Loading...