அஜித்தை கிண்டல் செய்யும் வசனத்தை தவிர்த்த விஜய் – என்ன வசனம் தெரியுமா?

ajith-vijay

தற்போது தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கும் இரண்டு சக்திகள் என்றால் அஜித், விஜய் தான். இவர்களது படங்கள் வெளியாகும் அன்று தான் தீபாவளி போல காட்சியளிக்கும்.

இருவருக்கும் தொழில்முறையில் போட்டி என்றாலும் நிகத்தில் இருவரும் நண்பர்களாக தான் இருக்கிறார்கள். இருப்பினும் இவர்களது ரசிகர்கள் தினம்தோறும் சண்டை போடுவதை நாம் பார்க்கிறோம்.

இந்நிலையில் விஜய்யை வைத்து வசீகரா படத்த இயக்கிய செல்வபாரதி சமீபத்தில் ஒரு பேட்டி அளித்துள்ளார், அதில் பல சுவாரஸ்ய தகவலை கூறியுள்ளார்.

இதில் குறிப்பாக அஜித் படம் வில்லன் வந்த போது விஜய் படத்தில் ‘நீ பேர் வச்சா தான் வில்லன், நான் எப்போவுமே வில்லன்டா’ என்ற வசனம் இருந்ததாம்.

அதை விஜய்யே ‘அண்ணே இதெல்லாம் வேண்டாம்’ என்று கூறி மறுத்ததாக செல்வபாரதி கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...