சிவா இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் இப்படித்தான் இருக்குமா? செம தகவல்

சிவா- அஜித் கூட்டணியில் நான்காவது முறையாக இணைந்து உருவான படம் விஸ்வாசம். குடும்ப கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமா ஓடிக்கொண்டிருக்கிறது. வசூலில் இதுவரை அஜித் படங்கள் செய்யாத சாதனையை இப்படம் படைத்தது வருகிறது.

குடும்பம், குடும்பமாக மக்கள் வந்து இப்படத்தை பார்த்து கொண்டாடியுள்ளனர், படத்தை ஜெயிக்கவும் வைத்துள்ளனர். தற்போது இயக்குனர் சிவாவின் அடுத்த படம் குறித்து நிறைய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

இப்போது என்ன விஷயம் என்றால் சிவா அடுத்து விஜய்யுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும், அப்படம் அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

அப்படி இந்த தகவல் உண்மையானால் அஜித், விஜய் என இருவரையும் இயக்கிய இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், பேரரசு, எஸ்.ஜே. சூர்யா வரிசையில் சிவாவும் இடம் பெறுவார்.

Suggestions For You

Loading...