தளபதி 63: அட்லீ படத்தில் விஜய்யின் கெட் அப் வெளியானது!

Vijay

தெறி, மெர்சல் படங்களின் வெற்றிக்கு பிறகு மீண்டும் விஜய் – அட்லீ கூட்டணி அமைத்துள்ளது. விஜய்யின் 63வது படமான இதை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது.

நயன்தாரா, கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், யோகி பாபு, டேனியல் பாலாஜி என பிரபல நடிகர்கள் நடித்து வரும் இப்படம் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவருகிறது.

படப்பிடிப்பு சென்னையில் மிக பிரமாண்டமான கால்பந்து ஸ்டேடியத்தில் அடுத்த 50 நாட்களுக்கு நடைபெறும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், விஜய், விவேக்குடன் கால்பந்து வீரர்களாக நடிப்பவர்கள் அனைவரும் ஸ்டேடியத்தில் அமர்ந்துள்ள ரசிகர்களின் கரகோஷத்தோடு உள்ளே வரும் காட்சி இன்று காலை படமாக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் ash கலர் pant, waist overcoat உடன் கூடிய ஃபார்மல் ஷூட் அணிந்திருந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Suggestions For You

Loading...