அட்லீ படத்திற்காக விஜய்யின் கெட் அப் மாற்றம் – வைரலாகும் புகைப்படம்!

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். விஜய்யின் 63வது படமாக உருவாகிவரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு, விவேக் ஆகியோரும், வில்லன் கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி ஆகியோரும் நடிக்கின்றனர்.

விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் நடிகர் கதிர் நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும், படத்தின் சில பகுதிகள் அமெரிக்காவில் எடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்படத்தில் விஜய் தன் புருவத்தில் ஒரு கோடு போட்டுள்ளார், இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

Suggestions For You

Loading...