அஜித் படம் வெற்றியடைந்ததற்கு விஜய் வைத்த விருந்து – செம குஷியான செய்தி இப்பொது வெளியானது!

vijay_and_ajith_kumar

தமிழ் சினிமாவில் தல தளபதியை நெருங்க ஆளே இல்லை. இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் வெறித்தனமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது, மற்ற நடிகர்கள் பார்த்து பொறாமை படம் அளவிற்கு இவர்களது ரசிகர்கள் பலம் என்பது இருக்கும்.

இதற்கு முக்கிய காரணம் இவர்களது கடினமா உழைப்பு, சந்தித்த அவமானங்கள் தான் அஜித், விஜய் இருவரையும் உச்சத்திற்கு கொண்டுசென்றது எனபது மறுக்கமுடியாத உண்மை.

சரி விஷயத்திற்கு வருவோம்.. அஜித்தின் படங்களில் மங்காத்தா பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க யுவன் இசையமைத்திருந்தார்.

படத்தில் பிரேம்ஜியும் நடித்திருந்தார். இப்படம் முடிந்த சமயம் விஜய் வெங்கட் பிரபு, பிரேம்ஜியை அழைத்து விருந்து வைத்து படம் பற்றி பேசினாராம்.

சூப்பர் படம் கொடுத்திருக்கிறீர்கள். முன்பே தன்னிடம் சொல்லியிருந்தால் படத்தில் ஆக்சன் கிங் கேரக்டரை நானே செய்திருப்பேன் என கூறினார்.

Suggestions For You

Loading...