தளபதி 63யின் விஜய்யின் இரண்டு கதாபாத்திரங்கள் – ஸ்பெஷல் அப்டேட் இதோ!

தெறி, மெர்சல் திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்- அட்லி கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும், கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் தற்போது விஜய் இப்படத்தில் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார் எனவும், ஒரே காட்சியில் அப்பா மகன் என இரு கதாபாத்திரங்களாக தோன்றுவார் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Suggestions For You

Loading...