அட்லீ படத்தில் கிறிஸ்ட்டின் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் – பெயர் கூட இதுதான்!

‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதன் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வருகிறது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் பெரிய பட்ஜெட் படமாக உருவாகிறது.

நயன்தாரா, கதிர், யோகி பாபு, விவேக் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்துக்கு மைக்கேல் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விளையாட்டுப் பயிற்சியாளராக நடிக்கும் விஜய், சரியான உடற்கட்டு பெற கடினமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Loading...