ஜெயலலிதா வேடத்தில் நடிக்க மறுத்த அஜித் பட நாயகி! – இது தான் காரணம்!

jayalalitha

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை நிறைய இயக்குனர்கள் படமாக முன்வந்துள்ளார்கள். இதில் இயக்குனர் ஏ.எல். விஜய் தலைவி என்ற பெயரில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை எடுக்கவுள்ளார்.

ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். முன்னதாக ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வித்யாபாலனிடம் பேச்சு நடந்தது. ஆனால் அந்த கதாபாத்திரத்தை ஏற்க மறுத்துள்ளார், அதன் காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

Vidya Balan

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி வேடம் ஏற்று வெப் சீரியலில் நடிக்க உள்ளார் வித்யாபாலன். இதை வித்யாவின் கணவர் சித்தார்த் ராய் கபூர் தயாரிக்கிறார். இந்திராகாந்தி வேடத்தில் நடிக்கும்போது வேறு எந்த திசை திருப்பமும் தனக்கு இருக்கக்கூடாது என்பதாலேயே ஜெயலலிதா வேடத்தை அவர் ஏற்கவில்லை என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இந்திரா காந்தி உடல்மொழி மற்றும் அவரது பேச்சு ஸ்டைல் போன்றவற்றை கற்பதற்கான பயிற்சியில் வித்யா ஈடுபட்டிருக்கிறார். இதற்கிடையில் வித்யாபாலன் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...