மங்காத்தா 2 படத்தின் தீம் மியூசிக் – வெங்கட் பிரபு ஓபன் டாக் !

அஜித்தின் 50வது படமான மங்காத்தா படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இப்படத்தில் அஜித் கெட்டவன் போன்ற தோற்றத்தில் நடித்திருப்பார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் இப்படம் அஜித் ரசிகர்கள் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.

வெங்கட் பிரபுவும் எந்த நிகழ்ச்சியில் சென்றாலும் மங்காத்தா 2 அமைய வேண்டும் என்றால் அதற்கு அஜித் அவர்கள் தான் சொல்ல வேண்டும், ஆனால் வருங்காலத்தில் அவருடன் ஒரு படம் இருக்கிறது என்று மட்டும் கூறி வருகிறார்.

அண்மையில் கூட ஒரு பேட்டியில் மங்காத்தா தீம் மியூசிக்கே 2ம் பாகம் தயாரானால் வருமா என்று கேட்டதற்கு, படத்திற்கு ஹிட் கொடுத்ததும் அந்த இசை தான், பில்லா 2விற்கு அமைந்தது போல் இதில் வரலாம். 2ம் பாகம் வர அஜித் அவர்கள் தான் சொல்ல வேண்டும் என மீண்டும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Loading...