வர்மா படத்தை மீண்டும் இயக்கப்போவது யார் தெரியுமா?

அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான வர்மா கைவிடப்பட்டுள்ளது. பாலா இயக்கிய இந்த படத்தில் துருவ் விக்ரம், புதுமுகம் மேகா சவுத்ரி உள்ளிட்டோர் நடித்திருந்தார்.

படம் முழுக்க எடுத்த பிறகு திருப்தியாக இல்லை என்று இப்படத்தை தயாரித்த ‘E4 எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தெரிவித்துவிட்டது.

இதையடுத்து துருவ் விக்ரமை வைத்து வேறு ஒரு இயக்குனர் அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலா எனும் புகழ்பெற்ற இயக்குனர் இயக்கிய வர்மா திரைப்படம், தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் கூறியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது யார் இந்த படத்தை இயக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது, அந்த வரிசையில் கெளதம் மேனன் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரம் பேசப்படுகிறது.

இன்னும் சில இயக்குநர்கள் படத்தைத் தாங்கள் இயக்க ஆர்வமாக உள்ளதாக தயாரிப்பாளரிடம் வாய்ப்பு கேட்டுவருவதாக கூறப்படுகிறது.

Suggestions For You

Loading...